மாவட்ட செய்திகள்

வேலூரில் 2-வது நாளாக தொடர்ந்து பலத்த மழை வீடு இடிந்து சேதம் + "||" + In Vellore The heavy rains continued for the 2nd day

வேலூரில் 2-வது நாளாக தொடர்ந்து பலத்த மழை வீடு இடிந்து சேதம்

வேலூரில்
2-வது நாளாக தொடர்ந்து பலத்த மழை
வீடு இடிந்து சேதம்
வேலூரில் 2-வது நாளாக தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வேலூர்,

கோடைக்காலம் முடிவடைந்த நிலையிலும், வேலூரில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று முன்தினமும் நேற்றும் கோடைக்காலத்தை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்தியது. சாலைகளில் நடந்து சென்றவர்கள் சுருண்டு விழும் அளவுக்கு வெயில் கொடுமை காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழையின் காரணமாக கீழ்மொணவூர் உடையார்தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் என்பவர் வசித்து வந்த வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த ஒரு சில பொருட்கள் சேதமானது. நல்ல வேளையாக வீட்டில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர். இது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றும் இரவு 11 மணியளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. 2-வது நாளாக தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நேற்று காலை 8 மணி வரை பதிவான அளவுப்படி வேலூரில் அதிகபட்சமாக 54 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது. மற்ற இடங்களில் பதிவான மழை அளவு விவரம் வருமாறு:-

காவேரிப்பாக்கம் -3.4, வாலாஜா -8.6, வாணியம்பாடி -15, திருப்பத்தூர் -16.4, குடியாத்தம்-18, மேலாலத்தூர்-20.6, ஆலங்காயம் -32, ஆற்காடு -34.2, ஆம்பூர் -38.8.