திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Sep 2018 10:54 PM GMT (Updated: 18 Sep 2018 10:54 PM GMT)

திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் குட்கா ஊழலில் ஈடுபட்ட அமைச்சர், காவல்துறை தலைவர் ஆகியோரை பதவி நீக்கம் செய்யக்கோரியும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார். திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.வும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் ஆர்.டி.இ.ஆதிசேஷன், மாநில மாணவர் அணி இணைச்செயலாளர் ஜெரால்டு, திருவள்ளூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 300-க்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதில் மாநில விவசாய அணி அமைப்பாளர் களாம்பாக்கம் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், கிறிஸ்டி என்கின்ற அன்பரசு, ஜெயசீலன், கூளூர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கி.வேணு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சுகுமார், ரமேஷ்ராஜ், நகர செயலாளர்கள் விஸ்வநாதன், மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் பரிமளம் விஸ்வநாதன், கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காஞ்சீபுரம் காவலான் கேட் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

இதில், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், நகர செயலாளர் கே.ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், முன்னாள் வாரிய தலைவர் வி.எஸ்.ராமகிருஷ்ணன் மாநில நெசவாளரணி அமைப்பாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் நன்றி கூறினார்.

Next Story