மாவட்ட செய்திகள்

திருவாரூருக்கு, மு.க.அழகிரி இன்று வருகை கருணாநிதி புகழ் அஞ்சலி கூட்டத்தில் பேசுகிறார் + "||" + Thiruvarur, MK Azhagiri today arrives at Karunanidhi fame

திருவாரூருக்கு, மு.க.அழகிரி இன்று வருகை கருணாநிதி புகழ் அஞ்சலி கூட்டத்தில் பேசுகிறார்

திருவாரூருக்கு, மு.க.அழகிரி இன்று வருகை கருணாநிதி புகழ் அஞ்சலி கூட்டத்தில் பேசுகிறார்
திருவாரூருக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) மு.க.அழகிரி வந்து கருணாநிதி புகழ் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
திருவாரூர்,

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மறைவை தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் தனித்து செயல்பட்டு வருகிறார். சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி சமாதிக்கு தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தினார்.


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருக்குவளையில் உள்ள அவருடைய இல்லத்தில் செயல்படும் நூலகத்திற்கு சென்று கருணாநிதி உருவப் படத்திற்கு மாலை அணிவித்தார். அதேபோல் காட்டூரில் உள்ள தனது பாட்டி அஞ்சுகதம்மாள் நினைவிடத்திலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கருணாநிதி மறைவுக்கு பிறகு 2 முறை திருவாரூருக்கு மு.க.ஸ்டாலின் வந்துள்ளது கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தி.மு.க. சார்பில் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள திருமண மண்டபத்தில் புகழ் அஞ்சலி கூட்டம் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் மு.க.அழகிரி இன்று(ஞாயிற்றுக்கிழமை) திருவாரூர் வருகிறார். முன்னதாக காட்டூரில் உள்ள பாட்டி அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, அங்கு கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கிறார். அதனை தொடர்ந்து திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள ஏ.கே.எம். திருமண அரங்கில் புகழ் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் யார் என்ற எதிர்ப்பார்ப்பு தொகுதி மக்கள் மட்டுமின்றி தி.மு.க. உள்பட அனைத்து கட்சியினருக்கு இருந்து வருகிறது. தி.மு.க. தலைமை யாரை அறிவித்தாலும் மகத்தான வெற்றி பெற பாடுவோம் என கட்சியினர் தயாராக இருந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் திருவாரூரில் கருணாநிதியின் புகழ் அஞ்சலி கூட்டத்தில் மு.க.அழகிரி கலந்து கொள்வது பெரும் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குமரிக்கு 19–ந் தேதி மோடி வருகை: அகஸ்தீசுவரத்தில் மேடை அமைக்கும் பணி தீவிரம் பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்
குமரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள 19–ந் தேதி பிரதமர் மோடி வருகிறார். அதற்காக அகஸ்தீசுவரத்தில் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
3. பிரதமர் மோடி 19-ந் தேதி குமரி வருகை ரூ.40 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
பிரதமர் மோடி வருகிற 19-ந் தேதி குமரி மாவட்டம் வருகிறார். அப்போது ரூ.40 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
4. ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் நாளை கரூர் வருகை
ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் நாளை கரூர் வருகை கட்சியினர் திரண்டு வர மாவட்ட செயலாளர் வேண்டுகோள்.
5. செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணையும் விழா: மு.க.ஸ்டாலின் 27-ந் தேதி கரூர் வருகை
செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணையும் விழாவில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந் தேதி கரூர் வருகிறார்.