லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து : 15 பேர் படுகாயம்


லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து : 15 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 3 Oct 2018 3:15 AM IST (Updated: 3 Oct 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

சேத்துப்பட்டில் லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் டிரைவர், கண்டக்டர் உள்பட 15 பேர் படுகாயமடைந்தனர்.

சேத்துப்பட்டு, 

பெங்களூருவில் இருந்து செய்யாறுக்கு நேற்று காலை பயணிகளுடன் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. செஞ்சி சாலையில் சேத்துப்பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அருகே வந்தபோது சாலையோரமாக நின்றிருந்த லாரி மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் முகப்பு கண்ணாடி சுக்குநூறாக உடைந்து சிதறியது. டிரைவர் ராமு, கண்டக்டர் சிவலிங்கம் மற்றும் பயணிகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story