மாவட்ட செய்திகள்

ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தர்ணா போராட்டம் + "||" + Association of Pensioners Societies Darna fight

ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தர்ணா போராட்டம்

ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தர்ணா போராட்டம்
பெரம்பலூரில் தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், புறநகர் பஸ்நிலைய வளாகத்தில் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.
பெரம்பலூர்,

பெரம்பலூரில் தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், புறநகர் பஸ்நிலைய வளாகத்தில் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் அகஸ்டின், தர்ணா போராட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட நிர்வாகிகள் பலர் கருத்துரை ஆற்றினர். போராட்டத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கேற்ப ஓய்வூதியத்தை வருமான வரிச் சட்டத்தின் கீழ் இணைக்கக் கூடாது. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற அனைவரையும் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் வேணுகோபால் நன்றி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 36 இடங்களில் உண்ணாவிரதம் விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை
விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி நாகை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 36 இடங்களில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. கிராமப்பகுதிகளில் அடிப்படை வசதி கேட்டு கலெக்டரிடம் மனு
கிராமப்பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதுடன் அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
3. கலெக்டர் அலுவலகம் முன்பு சங்கு ஊதும் போராட்டம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 25 பேர் கைது
திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சங்கு ஊதும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் பெயரில் ரூ.1 கோடி மோசடி செய்தவர்களை கைது செய்யக்கோரி நூதன போராட்டம்
கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் பெயரில் ரூ.1 கோடி மோசடி செய்தவர்களை கைது செய்யக்கோரி நூதன போராட்டம் நடந்தது. ராஜா, ராணி வேடம் அணிந்து வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
5. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு: முற்றுகை போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 37 பேர் கைது
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்திய, மக்கள் அதிகாரம் அமைப்பினர் 37 பேர் கைது செய்யப்பட்டனர்.