30 ஆண்டுகளுக்கு முன்பு ராமேசுவரம் கோவிலில் மாயமான சாமிசிலை கண்டுபிடிக்க பக்தர்கள் வலியுறுத்தல்
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ராமேசுவரம் கோவிலில் மாயமான சாமி சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கண்டு பிடிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவிலில் ராமர்,லெட்சுமணர்,ஆஞ்சநேயர் என ஐம்பொன்னால் ஆன பல சிலைகள் உள்ளன. இங்கு சுமார் 2 அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் ஆன லட்சுமணர் சிலை ஒன்று கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானது.இது குறித்து திருக்கோவில் அதிகாரிகள் சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் மாயமான இந்த சாமி சிலையை கண்டுபிடிக்க முடியவில்லை என காவல் துறையால் திருக்கோவில் நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் ராமேசுவரம் கோவிலில் காணாமல்போன சிலைகள் குறித்தும்,தற்போது எத்தனை சிலைகள் உள்ளது என்பது குறித்தும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் நேரில் வந்து கோவில் அதிகாரிகளிடம் தகவல்களை கேட்டு காணமல்போன சிலை குறித்தும் அதன் கேட்டுச்சென்றார்.
தமிழகத்தில் பல கோவில்களில் சிலைகள் குறித்து ஆய்வு நடத்தி விசாரணை நட த்தி வருவதுடன் பல சிலைகளை கண்டுபிடித்து வருவதுபோல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிகக்வேல் ராமேசுவரம் கோவிலுக்கும் வந்து இங்குள்ள அனைத்து சிலைகளையும் ஆய்வு செய்யவும்,மாயமான சிலைகளை கண்டு பிடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.