மாவட்ட செய்திகள்

வெவ்வேறு சம்பவங்களில் : 2 பெண்களிடம் சங்கிலி பறிப்பு + "||" + In different incidents: chain flush with 2 women

வெவ்வேறு சம்பவங்களில் : 2 பெண்களிடம் சங்கிலி பறிப்பு

வெவ்வேறு சம்பவங்களில் : 2 பெண்களிடம் சங்கிலி பறிப்பு
வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்களிடம் சங்கிலி பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில், 

சங்கரன்கோவில் ஓடைத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி வீரலட்சுமி (வயது 45). இவர் சம்பவத்தன்று காலையில் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர், வீரலட்சுமியின் கழுத்தில் கிடந்த 14 கிராம் தங்க சங்கிலியை பறித்தார். உடனே வீரலட்சுமி சங்கிலியை தனது கைகளால் இறுகப் பிடித்துக்கொண்டு சத்தம் போட்டார். அப்போது மர்மநபர் சங்கிலியை பிடித்து இழுத்ததில், சங்கிலி பாதியாக அறுந்தது. இதில் பாதி சங்கிலியுடன் மர்மநபர் தப்பிச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில், சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு கிருபாளினி தெருவை சேர்ந்தவர் ராமையா மனைவி அம்பிகா (62). இவர் நேற்று காலை வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், அவர் அணிந்திருந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர்.

இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.