வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்


வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Oct 2018 10:30 PM GMT (Updated: 13 Oct 2018 9:29 PM GMT)

கிருஷ்ணகிரியில் வாக்காளர் பட்டியல் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி நேற்று தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தை நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் சரவணன் முன்னிலை வகித்தார்.

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி கூறியதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்கும் பொருட்டு 1.1.2019-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்கும் பொருட்டு சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடைபெற்று வருகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாறுதல் செய்யப்பட்ட பின் விண்ணப்பங்கள் படிவம் 6, 7, 8 மற்றும் 8ஏ மாவட்டத்தில் உள்ள 1,850 வாக்குச்சாவடி மையங்களிலும் படிவங்கள் பெறும் முகாம் கடந்த மாதம் 9, 23-ந் தேதிகளிலும், இந்த மாதம் 7-ந் தேதியும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் சிறப்பு முறை திருத்த இறுதி முகாம் நடைபெற உள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் இந்த முகாமில் பங்கேற்று உரிய படிவங்களை பூர்த்தி செய்து வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்ற பணிகளை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை கல்லூரியை சேர்ந்த 500 மாணவர்கள் மற்றும் காவேரிப்பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி தாசில்தார் சேகர், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாலு, தீயணைப்பு கோட்ட துணை அலுவலர் அண்ணாதுரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மனோஜ்குமார், துணை தாசில்தார் சத்தியா, காவேரிப்பட்டணம் தேசிய மாணவர் படை ஆசிரியர் பவுன்ராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story