பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கோரி கவர்னருக்கு 3 ஆயிரம் அஞ்சல் அட்டைகள்


பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கோரி கவர்னருக்கு 3 ஆயிரம் அஞ்சல் அட்டைகள்
x
தினத்தந்தி 16 Oct 2018 11:00 PM GMT (Updated: 16 Oct 2018 9:46 PM GMT)

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கோரி, நாமக்கல், பள்ளிபாளையத்தில் இருந்து கவர்னருக்கு 3 ஆயிரம் அஞ்சல் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது.

நாமக்கல்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை காலம் முடிந்தும், 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிக்கக்கோரி, நாமக்கல்லில் மக்கள்பாதை இயக்கத்தினர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் இருந்து அஞ்சல் அட்டையில் கையெழுத்து பெற்று வந்தனர்.

இவ்வாறு கையெழுத்து பெறப்பட்ட 2 ஆயிரம் அஞ்சல் அட்டைகள் நாமக்கல் தலைமை தபால் நிலையத்தில் இருந்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கினைப்பாளர் வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல பள்ளிபாளையத்தில் தமிழக தேசிய கட்சியின் சார்பில் கவர்னருக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டது.

நிகழ்ச்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆதவன், மாவட்ட செயலாளர் அன்பரசு, தமிழ்நாடு வேட்டுவர் பேரவை நிர்வாகி கிரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பள்ளிபாளையம் தபால் நிலையத்தில் இருந்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கோரி, 1000 அஞ்சல் அட்டைகளை கவர்னருக்கு அனுப்பினர். 

Next Story