புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்


புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 21 Oct 2018 4:15 AM IST (Updated: 21 Oct 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி கடந்த 10-ந் தேதி அங்கீ கரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை,

இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற பொது தேர்தல் 2019-க்காக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கடந்த மாதம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி கடந்த 10-ந் தேதி அங்கீ கரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியில் 20-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் ஈடுபட்டனர். சரிபார்க்கப்பட்ட எந்திரங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர பாதுகாப்பு வைப்பு அறையிலேயே வைக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பாராளுமன்ற தேர்தலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் புதிய எந்திரங்கள் என மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story