கறம்பக்குடியில் கல்லூரி பேராசிரியைக்கு பன்றிக்காய்ச்சல்


கறம்பக்குடியில் கல்லூரி பேராசிரியைக்கு பன்றிக்காய்ச்சல்
x
தினத்தந்தி 1 Nov 2018 11:00 PM GMT (Updated: 1 Nov 2018 6:42 PM GMT)

கறம்பக்குடியில் கல்லூரி பேராசிரியைக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

கறம்பக்குடி, 
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியை சேர்ந்தவர் காந்திராஜ். இவரது மனைவி செந்தாமரை (வயது 35). இவர் புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதனால் அவர் கறம்பக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் காய்ச்சல் குண மாகவில்லை. இதையடுத்து புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்தனர்.இதில் அவருக்கு பன்றிக்காய்ச்சலின் அறிகுறி இருப்பதாக கூறி, அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து செந்தாமரை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை வழங்குவதில்லை எனவும், மருந்து,மாத்திரைகள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாகவும் நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். கறம்பக்குடி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால் திருமணமே நின்றது. இந்தநிலையில் பேராசிரியைக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Next Story