செந்துறை, கீழப்பழுவூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
செந்துறை, கீழப்பழுவூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
செந்துறை,
தமிழ்நாடு மின்சார வாரிய செந்துறை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செந்துறை துணைமின் நிலையத்தில் இன்று(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே, இங்கிருந்து மின் வினியோகம் பெறும் செந்துறை, இலங்கைச்சேரி, ஆதிகுடிக்காடு, உஞ்சினி, நல்லாம்பாளையம், சிறுகடம்பூர், சோழன்குறிச்சி, ஆனந்தவாடி, சென்னிவனம், ராயம்புரம், அகரம், கட்டையன்குடிக்காடு, மருவத்தூர், சேடக்குடிக்காடு, விழுப்பணங்குறிச்சி, பொன் பரப்பி, சிறுகளத்தூர், மருதூர், வஞ்சினபுரம், நல்லநாயக புரம், நக்கம்பாடி, மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, வங்காரம், அயன்தத்தனூர், முல்லையூர், நத்தகுழி, உகந்தநாயகன்குடிக்காடு, பெரியாகுறிச்சி, இலைக்கடம்பூர், பிலாக் குறிச்சி, வீராக்கன், செதலவாடி, நாகல்குழி, கீழமாளிகை, மத்துமடக்கி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
திருமானூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வில்சன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:- கீழப்பழுவூர் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் உயர் அழுத்த மின் பாதையில் இன்று(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆகவே கீழப்பழுவூர், மேலப்பழுவூர், கோக்குடி, சில்லக்குடி, மேத்தால், திம்மூர், கல்லக்குடி, அருங்கால், பொய்யூர், கீழவண்ணம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story