ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டுக்கதவை உடைத்து நகை-பணம் திருட்டு


ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டுக்கதவை உடைத்து நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 3 Nov 2018 3:30 AM IST (Updated: 3 Nov 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டுக்கதவை உடைத்து நகை-பணம் திருட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

விருதுநகர், 

விருதுநகர் சூலக்கரை வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கருப்பசாமி. ரியல் எஸ்டேட் அதிபரான இவர் வெளியூர் சென்றுவிட்டார். இவரது மனைவி பரிமளாவும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். 

பரிமளா திரும்பி வந்து பார்த்தபோது வீட்டுக்கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 2½ பவுன் வளையல், கேமரா, ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருந்தது. 

இதுபற்றிய புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story