தீபாவளி பண்டிகை: 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
தீபாவளி பண்டிகையையொட்டி தஞ்சை மாவட்டத்தில் இருந்து சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
சேதுபாவாசத்திரம்,
தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சின்னமனை பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, ராவுத்தன்வயல், செந்தலைவயல், அண்ணாநகர்புதுத்தெரு, மந்திரிப்பட்டிணம், செம்பியன்மாதேவிப்பட்டினம், கணேசபுரம் உள்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் மீன்பிடிதுறைமுகம் உள்ளது. இந்த மீன்பிடிதுறைமுகங்களில் இருந்து சுமார் 301 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். விசைப்படகு மீனவர்கள் வாரத்தில் திங்கள், புதன், சனிகிழமைகளிலும் மற்ற தினங்களில் நாட்டு படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.
இன்று(செவ்வாய்க்கிழமை) தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று மேற்கண்ட மீனவ கிராமங்களில் இருந்து சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்களின் நாட்டுபடகுகள் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதைப்போல மல்லிப்பட்டினம் மீன்பிடிதுறைமுகத்தில் விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மீன் ஏலக்கூடமும் வெறிச்சோடி காணப்பட்டது.

Related Tags :
Next Story