திருச்சியில் மாநில அளவிலான தடகள போட்டி தொடக்கம்
திருச்சியில் மாநில அளவிலான தடகள போட்டி தொடங்கியது.
திருச்சி,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு மாநில அளவிலான 19–வது தடகள விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கி நடந்தது. நுகர்பொருள் வாணிப கழக பொதுமேலாளர்(நிர்வாகம்) சிவசவுந்தரவள்ளி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதில் திருச்சி, சென்னை, மதுரை, கோவை, வேலூர், ராமநாதபுரம், நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் 600 பேர் கலந்து கொண்டனர்.
இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்பட பல்வேறு வகையான தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகள் 2–வது நாளாக இன்றும்(ஞாயிற்றுகிழமை) நடக்கிறது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று மாலை நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது.

Related Tags :
Next Story