ஆட்டோ மோதி தொழிலாளி சாவு
ஆட்டோ மோதி தொழிலாளி ஒருவர் பலியானார்.
செஞ்சி,
செஞ்சி பீரங்கிமேட்டை சேர்ந்தவர் சையத் பாஷா(வயது 55). தொழிலாளி. இவர் தனது சைக்கிளில், செஞ்சியில் விழுப்புரம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் வந்த ஆட்டோ சைக்கிள் மீது மோதி கவிழ்ந்தது.
இதில் சையத் பாஷா மற்றும் ஆட்டோவில் வந்த அப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ்(25), அவரது மனைவி செந்தாமரை ஆகியோர் காயமடைந்தனர். இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக, செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சையத் பாஷா அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவரது நிலமை மோசமானது. இதையடுத்து அங்கிருந்து சென்னைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட சையத் பாஷா, செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சத்தியராஜ், செந்தாமரை ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Tags :
Next Story