திருமானூர் கைலாசநாதர் கோவிலில் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆய்வு


திருமானூர் கைலாசநாதர் கோவிலில் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆய்வு
x
தினத்தந்தி 12 Nov 2018 10:30 PM GMT (Updated: 12 Nov 2018 7:42 PM GMT)

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் நேற்று முன்தினம் குளிக்கச்சென்ற சிறுவர்கள் ஆற்றின் கரையில் கண்டெடுத்த 2 சாமி கற்சிலைகள் திருமானூர் கைலாசநாதர் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் நேற்று முன்தினம் குளிக்கச்சென்ற சிறுவர்கள் ஆற்றின் கரையில் கண்டெடுத்த 2 சாமி கற்சிலைகள் திருமானூர் கைலாசநாதர் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காரப்பாக்கம் மாரியம்மன் கோவிலின் ஐம்பொன் சிலை மற்றும் திருமானூர் கைலாசநாதர் கோவில் ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட சிலைகளையும், அவைகளை பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் கோவிலில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகளை ஆய்வு செய்த அவர், கண்காணிப்பு கேமரா மற்றும் ஆபத்து நேரங்களில் ஒலிக்கக்கூடிய அலாரம் முழு நேர செயல்பாட்டில் இருக்க நடவடிக்கை எடுக்க கோவில் நிர்வாக அலுவலர் அருண்பிரகாசிற்கு உத்தரவிட்டார். மேலும் கோவிலின் உள்ளேயும், வெளியேயும் உரிய பாதுகாப்பு அளிக்கவும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன், கோவில் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story