காஞ்சீபுரம் நகராட்சியில் கலெக்டர் ஆய்வு


காஞ்சீபுரம் நகராட்சியில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 13 Nov 2018 11:00 PM GMT (Updated: 13 Nov 2018 6:53 PM GMT)

காஞ்சீபுரம் நகராட்சியில் கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை நாள்தோறும் பல்வேறு இடங்களுக்கு சென்று கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்து வருகிறார். காஞ்சீபுரம் நகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு, அறப்பணஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் பொன்னையா நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, திருக்காலிமேடு அறப்பணஞ்சேரி பகுதிகளில் குப்பைகள் ஆங்காங்கே குடியிருப்பு பகுதிகளில் தேங்கி கிடப்பதை கண்டறிந்து அந்த பகுதிகளை சுத்தம் செய்ய நகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் காஞ்சீபுரத்தில் சேகரிக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படும் திறந்தவெளி பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து காஞ்சீபுரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து உரமாக தயாரிக்கப்படும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கே புதிதாக குப்பைகளை மக்க வைத்து உரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது, காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் சர்தார், என்ஜினீயர் மகேந்திரன், மாவட்ட பயிற்சி மருத்துவ அதிகாரி தீபா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோவன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story