ரூ.1½ கோடி மதிப்புள்ள நட்சத்திர ஆமைகள் பறிமுதல் : 2 பேர் கைது


ரூ.1½ கோடி மதிப்புள்ள நட்சத்திர ஆமைகள் பறிமுதல் : 2 பேர் கைது
x

நவிமும்பைக்கு பஸ்சில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடியே 46 லட்சம் மதிப்புள்ள நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

நவிமும்பை,

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் இது தொடர்பாக  கைது செய்யப்பட்டனர்.

புனேயில் இருந்து அரியவகை ஆமைகள் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் புனேயில் இருந்து நவிமும்பைக்கு வரும் வாகனங்களில் அதிகாரிகள் வாஷியில் நின்றுக்கொண்டு சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு பஸ்சில் சந்தேகப்படும் வகையில் 2 வாலிபர்கள் பெரிய பைகளுடன் அமர்ந்து இருந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்கள் வைத்திருந்த பையை திறந்து சோதனை போட்டனர்.

இதில், அந்த பைகளில் துணிகளுக்கு மத்தியில் அரியவகை நட்சத்திர ஆமைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அதில் இருந்த 293 சிறிய அளவிலான நட்சத்திர ஆமைகளை பறி முதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 46 லட்சம் என்பது தெரியவந்தது. பின்னர் 2 வாலிபர்களையும், அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம் ஆனந்த்பூரை சேர்ந்த கொன்டையா மற்றும் ஸ்ரீகாந்த் என்பது தெரியவந்தது. இருவரிடமும் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story