மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகம் முன்பு அரசாணை நகல் எரித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + The Collector office has previously demonstrated government employees who burnt the copy of the court

கலெக்டர் அலுவலகம் முன்பு அரசாணை நகல் எரித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கலெக்டர் அலுவலகம் முன்பு அரசாணை நகல் எரித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசாணை நகல் எரித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி,

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங் கள் உள்ளன. நீண்ட காலமாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அரசு பணியிடங் களை குறைக்கும் வகையிலும், புதிய பணியிடங்களை உருவாக்காத வகையிலும் அரசாணை (எண் 56) வெளியிடப்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.


இந்த அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அரசாணை 56-ன் நகலை எரிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்தது. அதன்படி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசாணை நகல் எரிக்கும் போராட்டம் நேற்று மாலையில் நடந்தது.

கோஷங்கள்

போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஞான.திருப்பதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முகமதுஅலிஜின்னா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அரசாணை 56-ன் நகலை எரித்தனர். பின்னர், இந்த அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: வேதாரண்யத்தில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து வேதாரண்யத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: தஞ்சையில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து தஞ்சையில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மங்களமேடு அருகே உள்ள சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5. பொள்ளாச்சி பாலியல் வன்முறையை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் வன்முறையை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.