ஆந்திராவில் இருந்து 2,600 டன் ரேஷன் அரிசி நெல்லைக்கு வந்தது
ஆந்திராவில் இருந்து 2,600 டன் ரேஷன் அரிசி நெல்லைக்கு நேற்று வந்தது.
நெல்லை,
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சரக்கு ரெயில் மூலம் ரேஷன் அரிசி நெல்லைக்கு கொண்டு வரப்படும். பின்னர் அந்த அரிசி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கிக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
கடந்த மாதம் 2 ஆயிரத்து 500 டன் ரேஷன் அரிசி நெல்லைக்கு வந்தது.
இந்த மாதத்துக்கான ரேஷன் அரிசி நேற்று ஆந்திர மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
ரெயில் பெட்டிகளில் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 2,600 டன் ரேஷன் அரிசி வந்தது. அந்த அரிசி மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளிகள் லாரிகளில் ஏற்றினர்.
நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கிக்கும், பாளையங்கோட்டையில் உள்ள கிட்டங்கிக்கும் லாரிகள் மூலம் ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
சில லாரிகளில் தூத்துக்குடி மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story