மாவட்டத்தில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு நகர காங்கிரஸ் தலைவர் வின்சென்ட் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.
இதில் வக்கீல் ராஜேந்திரவர்மா, வர்த்தகப் பிரிவு தலைவர் முபாரக், எஸ்.சி.,எஸ்.டி பிரிவு மாவட்ட தலைவர் ஆறுமுக சுப்பிரமணியம், கலை இலக்கிய பிரிவு கோவிந்தசாமி, மனித உரிமை அமைப்பு பிரிவு லலித்ஆண்டனி ஆகியோர் பங்கேற்று, இந்திராகாந்தி படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தி, பேசினார்கள். நிகழ்ச்சியில், அமல்ஏசுதாஸ், குமரேவல், கோவிந்தராஜ், ஜான், ரங்கசாமி, சரவணன், பர்கூர் வட்டார தலைவர் ஜாக்கப், பாண்டுரங்கன், அஜில்உல்லா, இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், லண்டன்கோபால் நன்றி கூறினார்.
ஓசூரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா காங்கிரஸ் சார்பில் மேற்கு மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு நடைப்பெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே.கோபிநாத் இந்திரா காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் ஓசூர் நகர தலைவர் நீலகண்டன் அனைவரையும் வரவேற்றார். மாநில கமிட்டி உறுப்பினர் பில்லாரெட்டி, மாவட்ட துணைதலைவர்கள் கார்த்திக்கவுடா, ஷாதிக்கான், திப்பராஜ், மாவட்ட செயலாளர் முருகன், மற்றும் முனிராஜ், சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வக்கீல்கள் பிரிவு சார்பில், இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஓசூர் எம்.ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலையருகே நடந்த நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் கட்சியின் வக்கீல்கள் பிரிவு மாவட்ட தலைவர் மஞ்சுநாதா தலைமை தாங்கி இந்திரா காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில், ஓசூர் நகர கமிட்டி முன்னாள் தலைவர் தியாகராஜன், சிவப்ப ரெட்டி, நசீர், தொரப்பள்ளி மஞ்சு, முத்தப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்தூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா நடந்தது. அப்போது மத்தூர்-தர்மபுரி சாலையில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வட்டார தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள், சாகுல் அமீது, ராகிப் ஜமால், அஜ்முதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story