வேதாரண்யம் அருகே சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது மோட்டார் சைக்கிள் பறிமுதல்


வேதாரண்யம் அருகே சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது மோட்டார் சைக்கிள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Dec 2018 3:45 AM IST (Updated: 2 Dec 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே சாராயம் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் வேட்டைக்காரனிருப்பில் நாகை மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். அதில் 35 லிட்டர் புதுச்சேரி சாராயம் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

இதில் அவர்கள் தோப்புத்துறை அப்துல்கபூர் மகன் தாரீக்முகமது (வயது36). அதே பகுதியை சேர்ந்த நைனாமுகமது (46) என்பதும், இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 35 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Next Story