2-ம் ஆண்டு நினைவுநாள்: கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி


2-ம் ஆண்டு நினைவுநாள்: கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி
x
தினத்தந்தி 6 Dec 2018 4:15 AM IST (Updated: 6 Dec 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கரூர்,

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கரூர் பஸ் நிலையம் அருகே மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமையில் அக்கட்சியினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கரூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.திருவிகா, மாணவர் அணி முன்னாள் மாவட்ட செயலாளர் என்.தானேஷ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் வக்கீல் வி.சி.கே.பாலகிருஷ்ணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கே.சி.பரமசிவம், கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கே.கமலக் கண்ணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொரணி கணேசன், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மணி, கரூர் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.செல்வராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரெயின்போ ஆர்.சேகர், ஸ்ரீ டிராவல்ஸ் கே.என்.முருகேசன், ஊராட்சி செயலாளர் ரெயின்போ ஆர்.மணிகண்டன், தொழில் அதிபர் பாலாஜி பேப்ரிக்ஸ் பி.சண்முகம், அமைப்பு சாரா கட்டுமான பிரிவு அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராயனூர் ஆர்.சாமிநாதன் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story