மோட்டார் சைக்கிளில் சென்ற அரசு பஸ் டிரைவர் பலி ஆட்டோ மோதியது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற அரசு பஸ் டிரைவர் ஆட்டோ மோதி பரிதாபமாக இறந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் திருக்குமார்(வயது 43). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சேதுநாராயணபுரத்தில் இருந்து வத்திராயிருப்பு சாலையில் சுந்தரமகாலிங்கம் என்பவரது தென்னந்தோப்பு அருகே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த திருக்குமாரை வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இது குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவை ஓட்டி வந்த சேதுநாராயணபுரத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் மகன் வனமுத்து என்பவரை கைது செய்தனர். டிரைவர் திருக்குமாருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார்.
Related Tags :
Next Story