உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதம்
பென்னாகரம் அருகே உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
பென்னாகரம்,
விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்கப்படுவதை கண்டித்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள எட்டியாம்பட்டி கிராமத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய கூட்டமைப்பினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் 7-வது நாளான நேற்று விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தை விவசாய சங்க தர்மபுரி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் மல்லையன், நிர்வாகிகள் கருரான், மகேந்திரன், ரவிக்குமார், சங்கர், அய்யந்துரை மற்றும் விவசாய சங்க கூட்டமைப்பினர், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில், விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைப்பதை கண்டித்தும். ஏற்கனவே அமைக்கப்பட்ட உயர் மின்கோபுரங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கி வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் போடப்படும் அனைத்து மின் திட்டங்களும் கேபிள் வழியாக நிலத்தில் பதித்து கொண்டு செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story