சொத்து வரி மறுமதிப்பீட்டுக்கு எதிர்ப்பு: ஜமாத் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் மேலப்பாளையத்தில் நடந்தது

சொத்து வரி மறுமதிப்பீட்டுக்கு எதிர்ப்பு: ஜமாத் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் மேலப்பாளையத்தில் நடந்தது
x
தினத்தந்தி 27 Dec 2018 10:00 PM GMT (Updated: 27 Dec 2018 12:23 PM GMT)

சொத்து வரி மறுமதிப்பீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலப்பாளையத்தில் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

நெல்லை, 

சொத்து வரி மறுமதிப்பீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலப்பாளையத்தில் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

உண்ணாவிரதம்

நெல்லை மாநகராட்சியில் தற்போது சொத்து வரி மறுமதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. அது அளவுக்கு அதிகமாக இருப்பதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கையை கைவிடக்கோரியும் நேற்று மேலப்பாளையத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

மேலப்பாளையம் அனைத்து சுன்னத்துல் ஜமாத் பள்ளிவாசல்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பு தலைவர் அமானுல்லா தலைமை தாங்கினார். செயலாளர் முகைதீன் அப்துல் காதர், பொருளாளர் புகாரி ‌ஷரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசியல் கட்சியினர் ஆதரவு

இவர்களது போராட்டத்துக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் ஆதரவு அளித்தனர். அ.ம.மு.க. மாநகர மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் உமாபதி சிவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்டு நல்லதம்பி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

Next Story