நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைக்கும் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி


நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைக்கும் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
x
தினத்தந்தி 28 Dec 2018 10:15 PM GMT (Updated: 28 Dec 2018 7:27 PM GMT)

சென்னை வண்ணாரப்பேட்டையில் ‘5 ரூபாய்க்கு’ மருத்துவம் பார்த்து, மறைந்த டாக்டர் ஜெயச்சந்திரனுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் ராயபுரத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமை தாங்கினார்.

திருவொற்றியூர்,

இதில் அமைச்சர் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு டாக்டர் ஜெயச்சந்திரனின் உருவ படத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் நடிகர் கே.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக் குமார் கூறியதாவது:-
மத விஷயங்களில் மத்திய அரசு தலையிடக்கூடாது. முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். காலம் காலமாக கடை பிடித்து வந்த இஸ்லாமிய சட்டங்கள் பாதுகாக்கப்படவேண்டும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நாகரிகம் தெரியவில்லை. அவருக்கு தலைமை தகுதி கிடையாது. ஊழல் குறித்து பேச தி.மு.வுக்கு தகுதி இல்லை.

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நாளைக்கே அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைக்கும். இது உறுதி. நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் தீர்ப்பு என்றுமே அ.தி.மு.க. பக்கம்தான். எங்களுடன் கூட்டணி அமைக்க பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. அவர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து, தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story