ஸ்டாலினால் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
ஸ்டாலினால் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.
காரைக்கால்,
வருகிற 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணியைவிட பா.ஜனதா வலுவான கூட்டணியை அமைப்போம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து பா.ஜனதா சார்பில் அதிகமான உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு செல்வார்கள்.
ஸ்டாலினால் முடியாது
தமிழகத்தில் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் ஸ்டாலினால் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது.
பா.ஜனதா ஆட்சியில் இந்தியா முழுவதும் நல்ல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதை மக்கள் உணர்ந்து வருகிறார்கள். பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு சட்ட ரீதியாகவும், மக்கள் நலனுக்காகவும் செயல்பட்டு வருகிறது.
நியாயப்படி
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி பா.ஜனதா முகவர் போல செயல்படுவதாக பலர் குற்றம் சுமத்தி வருகின்றனர். அது தவறானது. கிரண்பெடி கவர்னராக வந்த பின்புதான் மக்களுக்கு எல்லாம் நியாயப்படி கிடைக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள கவர்னர்கள் நியாயப்படி நடந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறி னார்.

Related Tags :
Next Story