மாநில செஸ் போட்டிக்கு மாணவ-மாணவிகள் தேர்வு


மாநில செஸ் போட்டிக்கு மாணவ-மாணவிகள் தேர்வு
x
தினத்தந்தி 7 Jan 2019 4:00 AM IST (Updated: 7 Jan 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவர்களிடையே செஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், அரியலூர் மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில் 7, 9, 11, 13, 15, 17 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில் மாணவ- மாணவிகளுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

தாமரைக்குளம்,

பள்ளி மாணவர்களிடையே செஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், அரியலூர் மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில் 7, 9, 11, 13, 15, 17 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில் மாணவ- மாணவிகளுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 192 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். 7 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் பிரான்சிஸ் அஸ்வர் முதலிடத்தையும், சதீஸ்குமார் 2-ம் இடத்தையும், பெண்கள் பிரிவில் வானதி முதலிடத்தையும், தனலட்சுமி 2-ம் இடத்தையும் பெற்றனர். இதுபோல் ஒவ்வொரு பிரிவிலும் 3 மாணவ- மாணவிகள் மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில் கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story