குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் கூறி பேரூராட்சி அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகை


குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் கூறி பேரூராட்சி அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 8 Jan 2019 11:12 PM GMT (Updated: 8 Jan 2019 11:12 PM GMT)

குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக புகார் கூறியும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோட்டக்குப்பம்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பர்கத் நகரில் சுமார் 600 குடும்பத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகத்துக்காக மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த குடிநீர் தொட்டியின் கீழ் பகுதியில் கழிவு நீர் தேங்குவதாகவும், அது குடிநீரில் கலப்பதாகவும் பிரச்சினை எழுந்தது. அது தொடர்பாக அப்பகுதி மக்கள் கோட்டக்குப்பம் பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதாக புகார் கூறி அப்பகுதி மக்கள் 100–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கழிவுநீர் கலந்த குடிநீரை எடுத்து வந்து அதிகாரிகளிடம் காண்பித்தனர். மேலும் அந்த குடிநீரை அலுவலக வளாகத்தில் தரையில் ஊற்றினர். இந்த போராட்டம் காரணமாக பரபரப்பு நிலவியது.

அதுபற்றி தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமணி, சப்–இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து முற்றுகையில் ஈடுபட்ட மக்களை சமாதானம் செய்தனர். மேலும் கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து மனு கொடுக்கும்படி போலீசார் கூறினார்கள். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதனை ஏற்க மறுத்தனர்.


Next Story