பொங்கல் பரிசு வழங்க கூடாது என்ற தி.மு.க.வின் சதி தவிடு பொடியாகி விட்டது -ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு


பொங்கல் பரிசு வழங்க கூடாது என்ற தி.மு.க.வின் சதி தவிடு பொடியாகி விட்டது -ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 12 Jan 2019 11:05 PM GMT (Updated: 12 Jan 2019 11:05 PM GMT)

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க கூடாது என்ற தி.மு.க.வின் சதி தவிடு பொடியாகி விட்டது என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

மதுரை,

மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கட்சி நிர்வாகிகளுக்கு அரிசி, வெல்லம், நெய், முந்திரிபருப்பு, பாசிபருப்பு, தேங்காய், வாளியுடன் கூடிய பொங்கல் பரிசினை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

ஜெயலலிதாவின் கனவுகளையும், லட்சியங்களையும் நிறைவேற்றும் வகையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தமிழக மக்களுக்காக தினந்தோறும் திட்டங்களை அள்ளி, அள்ளி கொடுத்து தமிழகத்தில் ஒரு பொற்கால ஆட்சியை நடத்தி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக ரூ.1,000 நிதியுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் அ.தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஆனால் இதனை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க. மறைமுகமாக ஐகோர்ட்டில் வழக்கு போட்டு, தடை பெற்றனர். ஆனால் அந்த தடையும் தமிழக அரசால் நீக்கப்பட்டு பொங்க,ல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தி.மு.க.வின் சதி தவிடு பொடியாகி விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story