கரூர் மாவட்டத்தில் நடப்பாண்டு ரூ.139 கோடியில் திட்ட பணிகள் கலெக்டர் அன்பழகன், திட்ட அதிகாரி எஸ்.கவிதா தகவல்


கரூர் மாவட்டத்தில் நடப்பாண்டு ரூ.139 கோடியில் திட்ட பணிகள் கலெக்டர் அன்பழகன், திட்ட அதிகாரி எஸ்.கவிதா தகவல்
x
தினத்தந்தி 14 Jan 2019 10:45 PM GMT (Updated: 14 Jan 2019 8:19 PM GMT)

கரூர் மாவட்டத்தில் ரூ.139 கோடி மதிப்பில் திட்ட பணிகள் நடைபெற்றுள்ளது.

கரூர்,

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 726 பணிகள் ரூ.12 கோடியே 44 லட்சத்திலும், தமிழக அரசின் முதலமைச்சர் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் ரூ.6 கோடியே 15 லட்சம் மதிப்பில் 362 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 192 திட்டங்கள் ரூ.8 கோடியே 54 லட்சத்தில் பணிகள் நடை பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 55 பணிகள் ரூ. 3 கோடியே 20 லட்சம் மதிப்பில் நிறைவு பெற்றுள்ளது.

தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் 41 ஆயிரத்து 242 பயனாளிகளுக்கு ரூ .49 கோடியே 49 லட்சம் மதிப்பில் தனிநபர் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.

நபார்டு உள்கட்டமைப்பு திட் டத்தை மேம்படுத்த 15 திட்டங் கள் ரூ.9 கோடியே 72 லட்சம் மதிப்பிலும், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 26 சாலைகள் ரூ.31 கோடியே 23 லட்சத்திலும் நடைபெற்று உள்ளது.

தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 41 பணிகள் ரூ.12 கோடியே 30 லட்சத்திலும், கிராம தன்னிறைவு திட்டத்தின் கீழ் 6 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நடப்பாண்டு ஒப்படைக்கப் பட்ட வருவாய் நிதியில் இருந்து தார் சாலை 20 பணிகள் ரூ.3 கோடி யே 56 லட்சம் மதிப்பிலும், ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியில் இருந்து சிறிய பாலம் மற்றும் சிமெண்ட் சாலை அமைத்தல் உள்பட 3பணிகள் ரூ.77 லட்சத்தில் நடை பெற்றுள்ளது. ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 பணிகள் ரூ.2 கோடியே 5லட்சத்தில் பணிகள் நடைபெற்றுள்ளது.

இந்த தகவலை கலெக்டர் த.அன்பழகன், திட்ட இயக்குனர் எஸ்.கவிதா ஆகியோர் தெரி வித்து உள்ளனர்.

Next Story