நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2019 9:26 PM GMT (Updated: 18 Jan 2019 9:26 PM GMT)

நாமக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூபதி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், ஜெகதீசன், ராஜேந்திர பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் வரவேற்றார். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் செல்வராஜ் ஆர்ப்பாட்டத்திற்கான கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் விரோத நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோஷங்களை எழுப்பினர். மேலும் அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட உள்ள எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கு விதிகளுக்கு புறம்பாக இடைநிலை ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை கைவிட கோரியும், 3,500 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளோடு இணைக்கும் திட்டத்தை கைவிட கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

அதேபோல் 3,500 சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதில் ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணாதுரை, முருக செல்வராஜ், லோகநாதன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் அத்தியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.


Next Story