2,873 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்


2,873 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
x
தினத்தந்தி 21 Jan 2019 3:45 AM IST (Updated: 20 Jan 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட அய்யங்கார்குளம், ஆற்பாக்கம், இரட்டை மங்களம், நெய்யாடுபாக்கம், ஒரக்காட்டுப்பேட்டை, திருப்புலிவனம் போன்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திருப்புலிவனம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, உத்திரமேரூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெருநகர், மானாம்பதி, களியாம்பூண்டி, கமலம்பூண்டி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு உத்திரமேரூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அதிகாரி மகேஸ்வரி முன்னிலை வகித்தார். காஞ்சீபுரம் எம்.பி. மரகதம் குமரவேல் கலந்துகொண்டு மொத்தம் 2,873 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், ஒன்றிய செயலாளர் பிரகாஷ்பாபு, முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் கே.கங்காதரன், நகர பேரவை செயலாளர் துரைபாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story