பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட 35 மாணவர்களுக்கு வாந்தி மருத்துவமனையில் அனுமதி


பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட 35 மாணவர்களுக்கு வாந்தி மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 22 Jan 2019 4:00 AM IST (Updated: 22 Jan 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

திருக்குவளையில், பள்ளி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 35 மாணவர்களுக்கு வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் திருக் குவளையில் அஞ்சுகம் முத்து வேலர் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 700 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி அருகிலேயே விடுதி உள்ளது.

இந்த விடுதியில் 50 மாணவர்கள் தங்கி உள்ளனர். இவர்கள், பொங்கல் விடு முறையையொட்டி சொந்த ஊருக்கு சென்றனர். பின்னர் 35 மாணவர்கள் மட்டும் விடுதிக்கு வந்தனர்.

இவர்களுக்கு நேற்று மதியம் முட்டையுடன் உணவு வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர். இந்த நிலையில் திடீரென விடுதியில் சாப்பிட்ட 35 மாணவர்களுக்கு வாந்தி ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர்களை ஆசிரியர்கள் உடனடியாக திருக்குவளையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று மாணவர்களின் உடல் நலன் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள் விடுதியில் உள்ள மாணவர் களுக்கு சுத்தமான தண்ணீர் வழங்கும்படி விடுதி காப்பாளர் துரைச்சாமியிடம் அறிவுறுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து திருக்குவளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story