காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா


காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா
x
தினத்தந்தி 23 Jan 2019 3:45 AM IST (Updated: 23 Jan 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

உலக புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.

காஞ்சீபுரம்,

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், பெருந்தேவி தாயார், வரதராஜபெருமாள் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். பிறகு தெப்பம் கோவில் குளத்தை சுற்றி வந்தது. திரண்டு இருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். இதில் கோவில் செயல் அலுவலர்கள் குமரன், கவிதா, வெள்ளைச்சாமி, கோவில் மேலாளர்கள் சுரேஷ், ரகு, சுதர்சனம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரும், கோவில் செயல் அலுவலருமான என்.தியாகராஜன் செய்து இருந்தார்.

Next Story