மாவட்ட செய்திகள்

தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.21 லட்சம் கையாடல்; மேலாளர்கள் 3 பேர் கைது போலி ரசீது தயாரித்து கொடுத்தது அம்பலம் + "||" + Embezzlement in the private life insurance company 3 people arrested with Manager

தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.21 லட்சம் கையாடல்; மேலாளர்கள் 3 பேர் கைது போலி ரசீது தயாரித்து கொடுத்தது அம்பலம்

தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.21 லட்சம் கையாடல்; மேலாளர்கள் 3 பேர் கைது போலி ரசீது தயாரித்து கொடுத்தது அம்பலம்
திருப்பூரில் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் போலி ரசீது தயாரித்து கொடுத்து ரூ.21 லட்சம் கையாடல் செய்த மேலாளர்கள் 3 பேரை திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் கோர்ட்டு வீதியில் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் கிளை அலுவலகம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கிளை மேலாளராக நாகராஜன்முருகன் பணியாற்றி வருகிறார். இதே கிளையில் பிரிவு மேலாளர்களாக கோவை டாடாபாத்தை சேர்ந்த அருண்குமார் (வயது 30), கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ்பாபு (54), திருப்பூர் கவுண்டம்பாளையம் நால்ரோட்டை சேர்ந்த திவாகர்(30), மற்றும் சங்கர், மணிகண்டன் ஆகியோர் பணியாற்றினார்கள். இவர்கள் கடந்த 2017–ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2018–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அதை நிறுவனத்துக்கு செலுத்தாமல், அதற்கு போலியாக ரசீது தயாரித்து கொடுத்து கையாடல் செய்துள்ளனர். மேலும் வாடிக்கையாளர் சம்மதம் இல்லாமல் அவர்களின் பாலிசிகளையும் ரத்து செய்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த மேலாளர் நாகராஜன் முருகன் இதுதொடர்பாக திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், மேற்கண்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் 5 பேரும் சேர்ந்து போலியாக ரசீது தயாரித்து கொடுத்ததுடன் பாலிசிகளை ரத்து செய்து வாடிக்கையாளர்கள் 30 பேரிடம் ரூ.21 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அருண்குமார், வெங்கடேஷ்பாபு, திவாகர் ஆகிய 3 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மோசடியில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டில் போலி ஆவணங்கள் கொடுத்த 6 பேர் கைது
மோசடியில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டில் போலி ஆவணங்கள் கொடுத்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. நாடு முழுவதும் 155 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது: உள்துறை அமைச்சகம்
நாட்டில் இதுவரை 155 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
3. பெண் தற்கொலைக்கு காரணமான சுய உதவி குழு தலைவி கைது ரூ.10 லட்சம் மோசடி செய்தது அம்பலம்
திருச்சி அரியமங்கலத்தில் பெண் தற்கொலைக்கு காரணமான சுயஉதவி குழு தலைவியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் ரூ.10 லட்சம் மோசடி செய்ததும் அம்பலம் ஆனது.
4. இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்; ரனில் விக்ரமசிங்கே
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் குற்றச்சாட்டு கூறப்பட்ட அனைத்து பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டு விட்டனர் என பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
5. வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி 40 பேரிடம் ரூ.78 லட்சம் மோசடி; ஒருவர் கைது
வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி 40 பேரிடம் ரூ.78 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.