கோடநாடு கொலைகள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற வேண்டும் டி.டி.வி.தினகரன் பேட்டி
கோடநாடு கொலைகள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
கரூர்,
கரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் பகுதியில் 30 வருடமாக விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளது. திருவாரூர் இடைத்தேர்தல் அறிவித்த உடன் வேட்பாளரை அறிவித்து நாங்கள் தேர்தல் பணியாற்றினோம். பழமை வாய்ந்த கட்சியாக இருக்கும் தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் தேர்தலை நிறுத்த டெல்லியை நோக்கி சென்றார்கள். அ.தி.மு.க. மூழ்கி கொண்டிருக்கும் டைட்டானிக் கப்பல். உயிர், ரத்தம், சதை போன்ற தொண்டர்கள் எங்களிடம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
கோடநாடு கொலைகள் விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டனை பெற்றே ஆக வேண்டும். மு.க.ஸ்டாலின் என்ன சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியா?. இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சரே அச்சுறுத்தி பேசுவது எனக்கு சந்தேகமாக உள்ளது. இந்த வழக்கை காவல் துறையோ, சி.பி.ஐ.யோ விசாரித்தால் சரியாக இருக்காது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் பி.எஸ்.என்.தங்கவேல், மாவட்ட அவைத்தலைவர் ஆரியூர் பி.சுப்பிரமணி, மாவட்ட கழக பொருளாளர் வி.ஜி.எஸ். குமார், மாவட்ட துணை செயலாளர் பெரியண்ணன், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் வக்கீல் நாகராஜன், மாவட்ட பேரவை செயலாளர் வேங்கை ரமேஷ், கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் என்.ஆர்.கண்ணன், கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் புல்லட் ஆ.சண்முகம், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மாயனூர் எஸ்.மாதவன், பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ராமசாமி, குளித்தலை ஒன்றிய செயலாளர் சி.கலைமணி, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பூபதி, அரவக்குறிச்சி பேரூர் கழக செயலாளர் அயுப், தாந்தோணி ஒன்றிய செயலாளர் கே.கே.பாலசுப்பிரமணி உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story