திருவாரூரில் நடந்த குடியரசு தின விழாவில் 76 பேருக்கு ரூ.11¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


திருவாரூரில் நடந்த குடியரசு தின விழாவில் 76 பேருக்கு ரூ.11¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 26 Jan 2019 11:00 PM GMT (Updated: 26 Jan 2019 6:41 PM GMT)

திருவாரூரில் நடந்த குடியரசு தின விழாவில் 76 பேருக்கு ரூ.11¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் வழங்கினார்.

திருவாரூர்,

திருவாரூர் விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

பின்னர் 11 சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். சிறப்பாக பணி புரிந்தமைக்காக 91 போலீசார் மற்றும் அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.17 ஆயிரம் மதிப்பிலான உதவி உபகரணங்கள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் 54 பேருக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகைக்கான ஆணை, வேளாண்மைத்துறை சார்பில் 3 பேருக்கு ரூ.5 லட்சத்து 2 ஆயிரத்து 400 மதிப்பிலான தென்னங்கன்றுகள், எந்திர உழவு கழப்பை உபகரணங்கள், பள்ளி கல்வி துறையின் சார்பில் 3 பேருக்கு ரூ.12 ஆயிரத்து 54 மதிப்பிலான பயிற்சி கற்றல் உபகரணங்கள் என மொத்தம் 76 பேருக்கு ரூ.11 லட்சத்து 83 ஆயிரத்து 980 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

அதனை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளில் நடைபெற்றது. இதில் பூந்தோட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், பனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, பூந்தோட்டம் லலிதாம்பிகை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி, கொண்டயானிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மூன்றாமிடமும் பெற்றன. வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) ரவிச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் சந்துரு, உதவி கலெக்டர்கள் முருகதாஸ், பத்மாவதி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் உமா, முதன்மை கல்வி அதிகாரி மாரிமுத்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இருதயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story