முல்லுண்டில் வாலிபரை கொன்று உடல் தீ வைத்து எரிப்பு போலீஸ் விசாரணை


முல்லுண்டில் வாலிபரை கொன்று உடல் தீ வைத்து எரிப்பு போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 30 Jan 2019 4:40 AM IST (Updated: 30 Jan 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

முல்லுண்டில்வாலிபரை கழுத்து அறுத்து கொன்று உடலை தீ வைத்து எரித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மும்பை,

மும்பை முல்லுண்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே சம்பவத்தன்று மதியம் நிர்வாண நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.அவரது உடல் பாதி எரிந்து இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சிஅடைந்த அந்த கல்லூரியின் ஆய்வக உதவியாளர், உடனே இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், பிணமாக மீட்கப்பட்டவரின் நெஞ்சில் பலத்த கத்திக்குத்து காயமும், முகத்தில் ரசாயனமும் வீசப்பட்டு இருந்தது. மேலும் அவரது கழுத்தும்அறுக்கப்பட்டு இருந்தது.

விசாரணையில், யாரோ மர்மஆசாமிகள் அவரை கொடூரமான முறையில் கொலை செய்து உடலை தீ வைத்து எரித்துள்ளனர். மேலும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அவரது முகத்தை கத்தியால் குத்தி சிதைத்து ரசாயனத்தை வீசியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வாலிபருக்கு 30 வயது இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையான அந்த வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பதை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை அடையாளம் காண அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும்ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story