திருச்சி வழியாக இன்று முதல் நாகர்கோவில்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கம்


திருச்சி வழியாக இன்று முதல் நாகர்கோவில்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கம்
x
தினத்தந்தி 1 Feb 2019 10:00 PM GMT (Updated: 1 Feb 2019 10:02 PM GMT)

திருச்சி வழியாக இன்று (சனிக்கிழமை) முதல் நாகர்கோவில்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

திருச்சி,

ரெயில்களில் கூட்டநெரிசலை தவிர்க்க நாகர்கோவில்-வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. நாகர்கோவிலில் இருந்து (வ.எண்06094) சிறப்பு ரெயில் இன்று (சனிக்கிழமை), வருகிற 9, 16, 23 ஆகிய தேதிகளிலும், மார்ச் மாதம் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்றடையும்.

இதேபோல வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 5, 12, 19, 26 ஆகிய தேதிகளிலும், மார்ச் மாதம் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளிலும் இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் மூன்றடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள் 2-ம், 6 படுக்கை வசதி பெட்டிகள், 4 முன்பதிவில்லா பெட்டிகள், 2 சரக்கு வேகன்கள் இணைக்கப்பட்டிருக்கும்.

இதேபோல கொல்லம்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. கொல்லத்தில் இருந்து வருகிற 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும், மார்ச் மாதம் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும் மாலை 4 மணிக்கு சிறப்பு ரெயில் (வ.எண்.06096) புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு மறுநாள் காலை 10 மணிக்கு சென்றடையும்.

வேளாங்கண்ணியில் இருந்து சிறப்பு ரெயில் (வ.எண் 06095) இன்றும், வருகிற 10, 17, 24, மார்ச் மாதம் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு கொல்லத்திற்கு மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் நாகப்பட்டினம், திருவாரூர், நீடாமங்கலம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, ஆரியங்காவு, தென்மலை, புனலூர், கொட்டாரக்கரா, குண்டாரா உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். மேற்கண்ட தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Next Story