வேலூர் ஜெயிலில் முருகனுக்கு ஆதரவாக நளினியும் உண்ணாவிரதம் ராஜீவ் காந்தி கொலைவழக்கு கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரிக்கை


வேலூர் ஜெயிலில் முருகனுக்கு ஆதரவாக நளினியும் உண்ணாவிரதம் ராஜீவ் காந்தி கொலைவழக்கு கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரிக்கை
x
தினத்தந்தி 9 Feb 2019 11:00 PM GMT (Updated: 9 Feb 2019 7:48 PM GMT)

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப் பட்ட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனுக்கு ஆதரவாக அவருடைய மனைவி நளினியும் உண்ணாவிரதம் தொடங் கினார்.

வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஆண் கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப் பட்டுள்ளனர். கடந்த 28 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப் பட்டுள்ள முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக கவர்னர் முடிவெடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. தமிழக அரசு 7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தும், இதுவரை கவர்னர் முடிவெடுக் கவில்லை.

ராஜீவ்காந்தி கொலை வழக்கிற்கும், எங்களுக்கும் தொடர்பில்லை. எனவே எங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது உண்ணா விரதம் இருந்து சாகவிடுங்கள் என்று முருகன் கடந்த 7-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 3-வது நாளாக நேற்றும் முருகனின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. அவர் தண்ணீர் கூட குடிக் காமல் தீவிர உண்ணாவிரதம் இருப்பதாக கூறப்படுகிறது. அவரை சிறை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரியும், கணவர் முருகனுக்கு ஆதரவா கவும் நளினி மத்திய பெண்கள் ஜெயிலில் உண்ணாவிரதத்தை நேற்று காலை தொடங்கினார். இதுதொடர்பான கடிதத்தை நளினி நேற்று முன்தினம் சிறை கண்காணிப்பாளர் ஆண் டாள், சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி ஆகியோரிடம் வழங்கினார்.

இதற்கிடையே நேற்று மதியம் முருகன் மற்றும் நளினியை அவர்களுடைய வக்கீல் புகழேந்தி சந்திந்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

வேலூர் மத்திய பெண்கள் தனிச்சிறையில் கடந்த 28 ஆண்டுகளாக அடைக்கப் பட்டுள்ள நளினி இந்த உலகை விட்டு செல்லும் நேரம் இது எனக்கூறி தமிழக கவர்னருக்கு சிறைத்துறை மூலம் மனு அளித்து இன்று (நேற்று) முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் 161-ம் சட்ட விதியின்படி விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கூடி இயற் றப்பட்ட தீர்மானத்தை கவர் னருக்கு அனுப்பியும், இது வரை அதன்மீது எவ்வித பதிலும் கவர்னர் அளிக்க வில்லை.

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி 1,000-க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் விடுவிக்கப் பட்டனர். ஆனால் நாங்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவதாகவும், அதனால் உடல் மெலிந்து, மனம் சோர்ந்து காணப்படுவதாகவும் கவர்னருக்கு அனுப்பிய மனுவில் நளினி குறிப் பிட்டுள்ளார்.

மேலும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் அல்லது உண்ணாவிரதம் இருந்து சாக அனுமதிக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்து வரும் கணவர் முருகனுக்கு ஆதர வாக பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினியும் உண்ணா விரதம் மேற் கொண்டுள் ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story