மாவட்ட செய்திகள்

திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில்பாதை பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிவடையும் + "||" + Tiruvarur-Karaikudi-wide railway tracks will end in March

திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில்பாதை பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிவடையும்

திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில்பாதை பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிவடையும்
திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை பணிகள் வருகிற மார்ச் மாதத்துக்குள் முடிவடையும் என தென்னகரெயில்வே பொதுமேலாளர்் குல்ஸ்ரஷ்தா கூறினார்.
திருவாரூர், 

திருவாரூர் ரெயில் நிலையத்தில் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நவீன முறையில் நிலக்கரி ஏற்றி புறப்பட்ட 150-வது சரக்கு ரெயிலை தென்னக ரெயில்வே பொது மேலாளர்் குல்ஸ்ரஷ்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி செல்லும் 150-வது சரக்கு ரெயிலை கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்திருப்பது ரெயில்வே துறைக்கும், காரைக்கால் துறைமுகத்திற்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. இனி வரும் காலங்களில் அதிக அளவில்

நிலக்கரி சரக்கு ரெயில் மூலமாக கொண்டு செல்லப் படும்.

திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை பணிகள் வருகிற மார்்ச் மாதத்துக்குள் முடிவடையும். திருச்சி-காரைக்கால், விழுப்புரம்-கடலூர்் மின்மயமாக்கும் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும். திருவாரூரில் இருந்து திருச்சிக்கு பயணிகளின் எண்ணிக்கையை கொண்டு புதிய ரெயில்கள் இயக்குவதற்கு முடிவு செய்யப்படும். மன்னை-கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் திருவாரூர் வரை நீட்டிப்பு செய்வது பரீசிலிக்கப்படும்.

ரெயில் நீட்டிப்பு, புதிய ரெயில் குறித்து எம்.பி.க்கள் வைக்கும் கோரிக்கைகளை கொண்டு முடிவு எடுப்பது ரெயில்வே துறை வாரியத்தின் கையில் தான் உள்ளது. பேரளம்-காரைக்கால் ரெயில் பாதை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது காரைக்கால் துறைமுகத்தின் தலைமை செயல் அதிகாரி முரளிதரன், திருச்சி மண்டல ரெயில்வே துணை மேலாளர் உதயகுமார் ரெட்டி உள்பட பலர் உடனிருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தேளூர் திறன் மின்மாற்றியில் 3 நாட்கள் பராமரிப்பு பணிகள்; இன்று தொடங்குகிறது
அரியலூர் கோட்டம் மற்றும் உப கோட்டத்திற்கு உட்பட்ட தேளூர் துணை மின் நிலையத்தில் உள்ள திறன் மின்மாற்றி எண் 1-ல் சிறப்பு பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் வரை நடைபெறுகிறது.
2. வேளாங்கண்ணி அருகே திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் சேமிக்கும் பணி மும்முரம்
வேளாங்கண்ணி அருகே திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகளை சேமிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
3. மாயனூர்-உப்பிடமங்கலம் பகுதிகளில் ரூ.11¾ கோடியில் திட்ட பணிகள் அமைச்சர் தொடங்கி வைத்தார்
மாயனூர்-உப்பிடமங்கலம் பகுதிகளில் ரூ.11¾ கோடியில் திட்ட பணிகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
4. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருவாரூரில் நடந்தது
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருவாரூரில் நடந்தது.
5. விசுவக்குடி அணையில் ரூ.2 கோடியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவக்குடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதிய அணையை திறந்து வைத்தார்.