மாவட்ட செய்திகள்

அஞ்சுகிராமம் அருகே மாயமான வாலிபர் கால்வாயில் பிணமாக மீட்பு + "||" + Near Anchagram Recovering dead in a magical youth canal

அஞ்சுகிராமம் அருகே மாயமான வாலிபர் கால்வாயில் பிணமாக மீட்பு

அஞ்சுகிராமம் அருகே மாயமான வாலிபர் கால்வாயில் பிணமாக மீட்பு
அஞ்சுகிராமம் அருகே மாயமான வாலிபரின் பிணம் கால்வாயில் மிதந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அஞ்சுகிராமம்,

அஞ்சுகிராமம் அருகே மயிலாடி, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவருடைய மகன் சபரி சரவணன் (வயது21), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 10–ந் தேதி மாலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.


இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் சபரி சரவணனை போலீசார் தேடி வந்தனர். 

இந்தநிலையில், மயிலாடி அருகே உசரவிளையில் புத்தனாறு கால்வாயில் நேற்று காலையில் குளிக்க சென்றவர்கள் தண்ணீரில் ஒரு வாலிபரின் பிணம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, பிணமாக கிடந்தவர் சபரி சரவணன் என்பது தெரிய வந்தது. அவரது சாவுக்கான காரணம் தெரியவில்லை.

இதையடுத்து பிணத்தை போலீசார் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சபரி சரவணன் கால்வாயில் கால் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவர் கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் நாய் சிக்கியதில் கீழே விழுந்த வாலிபர் சாவு தந்தை படுகாயம்
குளித்தலை அருகே மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் நாய் சிக்கியதில் கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடைய தந்தை படுகாயம் அடைந்தார்.
2. மண்ணச்சநல்லூர் அருகே உருட்டுக்கட்டையால் தாக்கி வாகன விற்பனையாளர் கொலை வாலிபர் கைது
மண்ணச்சநல்லூர் அருகே உருட்டுக்கட்டையால் தாக்கி வாகன விற்பனையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
3. குழந்தைைய தர மறுத்ததால் மனைவி மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது
குழந்தையை தர மறுத்ததால் மனைவி மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. அரியானாவில் 8வது மாடியில் இருந்து 2 நாய்க்குட்டிகளை கீழே வீசிய ஈராக் நாட்டு வாலிபர் கைது
அரியானாவில் 8வது மாடியில் இருந்து 2 நாய்க்குட்டிகளை கீழே வீசிய ஈராக் நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5. கன்னியாகுமரியில் சுற்றுலா பயணியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு வாலிபர் கைது
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணியிடம் 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.