இதயத்தை குணமாக்கும் பட்டை
இதய அறுவை சிகிச்சையிலிருந்து குணமடைய பல மாதங்கள் ஆகும். அதுவரை நோயாளி பல அசவுகரியங்களை சந்திக்க நேரிடும்.
டொரோண்டோ நகரை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஊசி மூலம் உடலில் செலுத்தக்கூடிய ஒரு துணி போன்ற பட்டையை கண்டுபிடித்துள்ளனர். உள்ளே இருக்கும் புண் ஆறுவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. நானோ சிப்ஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பட்டை இதய செல்களோடு ஒன்றிவிடும் தன்மையுள்ளது. ஊசியின் வழியே உள்ளே செல்லும் இந்த பட்டை காயத்தின் மீது படர்ந்து விரிந்து ஒட்டிக்கொள்கிறது. புதிய செல்களை உருவாக்கி பாதிக்கப்பட்ட திசுக்களை குணப்படுத்துகிறது. எலிகளின் மீது சோதனை செய்யப்பட்டு அது வெற்றிகரமாக முடித்துள்ளதால் மனிதர்களுக்கும் விரைவில் இது பயன்படுத்தப்பட உள்ளதாம். இம்முறையால் இதய அறுவை சிகிச்சைக்கு பின் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.
Related Tags :
Next Story