மாவட்ட செய்திகள்

கல்லூரி கட்டணம் செலுத்தாததால் விரக்தி பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Frustrated by college payments Polytechnic student suicide

கல்லூரி கட்டணம் செலுத்தாததால் விரக்தி பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

கல்லூரி கட்டணம் செலுத்தாததால் விரக்தி பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
செங்குன்றம் அருகே, கல்லூரி கட்டணம் செலுத்தாத விரக்தியில் பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன நகர் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் புருசோத்தமன். இவருடைய மகன் யுகாஷ் (வயது 16). இவர், கவரப்பேட்டை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தார்.

கல்லூரி கட்டணம் செலுத்தவேண்டும் என தனது தந்தையிடம் கூறினார். அதற்கு அவர், தற்போது பணம் இல்லை. கிடைத்த உடன் கட்டிக்கொள்ளலாம் என மகனிடம் கூறியதாக தெரிகிறது.

நேற்று காலை யுகாசின் பெற்றோர், செங்குன்றம் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த யுகாஷ், கல்லூரி கட்டணம் செலுத்தவில்லையே என்ற விரக்தியில், வீட்டின் கதவை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் தூக்கில் தொங்கிய யுகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உண்மையிலேயே மாணவர் யுகாஷ், கல்லூரி கட்டணம் செலுத்தவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சட்டக்கல்லூரி மாணவர்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட வேண்டும் நீதிபதி கயல்விழி வேண்டுகோள்
சட்டக்கல்லூரி மாணவர்கள் ஏழை மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடவேண்டும் என்று மாவட்ட நீதிபதி கயல்விழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. லாஸ்பேட்டையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை கடன் பிரச்சினையால் பரிதாப முடிவு
லாஸ்பேட்டையில் கடன் பிரச்சினையால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
3. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை
காங்கேயம் அருகே கவனிக்க யாரும் இல்லாததால் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். இதில் படுகாயத்துடன் தப்பிய அவர்களது பேரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4. ‘‘ஊருக்கு ரோடு சரியில்லை’’ என்று கூறி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
‘‘ஊருக்கு ரோடு சரியில்லை’’ என்று கூறி, குன்னத்தூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை தீயணைப்பு வீரர் ஒருவர் பாதுகாப்பாக கீழே அழைத்துவந்தார்.
5. கணவரின் கடன் தொல்லையால் தூக்கு போட்டு பெண் தற்கொலை
கணவரின் கடன் தொல்லையால் வேதனை அடைந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...