குமரி மாவட்ட அ.ம.மு.க. சார்பில் நாடாளுமன்ற பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
குமரி மாவட்ட அ.ம.மு.க. சார்பில் நாடாளுமன்ற பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட அ.ம.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் பச்சைமால் தலைமை தாங்கினார். ஹிமாம்பாதுஷா, செல்வம், கமலேஷ், அம்பிளிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அக்ஷயா கண்ணன் வரவேற்றார்.
கூட்டத்தில் அமைப்பு செயலாளரும், தென் மண்டல பொறுப்பாளருமான மாணிக்கராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது, “குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் நாடாளுமன்ற தேர்தலில் நமது வெற்றியை யாராலும் தடுக்க இயலாது. ஏன் எனில் குமரி மாவட்டத்தில் டி.டி.வி. தினகரனுக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கிறது. எனவே டி.டி.வி. தினகரன் தலைமையிலான அணியை வெற்றி பெற செய்ய மக்கள் தயாராக உள்ளனர். தேர்தலை பொறுத்த வரையில் பூத் கமிட்டி மிகவும் முக்கியம். ஒரு பூத்துக்கு 10 பேர் நியமிக்கப்பட்டு தீவிர பணியாற்ற வேண்டும். கட்சியில் இதுவரை சுமாராக பணியாற்றியவர்களும் இனி ஆர்வத்துடன் பணிகளை செய்ய வேண்டும். பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தால் கட்டாயம் தோல்வி தான் அடைய முடியும் என்று தெரிந்தும் அ.தி.மு.க.வினர் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ளனர். அவர்கள் கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக கூட்டணி வைத்திருக்கிறார்கள். இந்த கூட்டணி கண்டிப்பாக தோல்வி அடையும்“ என்றார்.
கூட்டத்தில் தென் மண்டல பொறுப்பாளர் ஆதித்தன், ஜெ. பேரவை துணை செயலாளர் லட்சுமணன், மேற்கு மாவட்ட செயலாளர் ஜெங்கின்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், அணி செயலாளர்கள் நவமணி, ஆறுமுகராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Tags :
Next Story