திருச்சி என்.ஐ.டி.யில் உதவி பேராசிரியர் பணி - 134 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்


திருச்சி என்.ஐ.டி.யில் உதவி பேராசிரியர் பணி - 134 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்
x
தினத்தந்தி 18 Feb 2019 2:28 PM IST (Updated: 18 Feb 2019 2:28 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி என்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு 134 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

தேசிய தொழில்நுட்ப கல்வி மையங்கள் சுருக்கமாக என்.ஐ.டி. எனப்படுகிறது. மத்திய கல்வி நிறுவனங்களில் ஒன்றான இதன் கிளை திருச்சியிலும் செயல்படுகிறது. தற்போது இந்த என்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர் (கிரேடு-2) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 134 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

வயது - கல்வித்தகுதி

இந்த பணிகளுக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் முதுநிலை படிப்புடன், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ. 500-ம், மற்றவர்கள் ரூ.1000-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை

இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 28-2-2019-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.nitt.edu/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story