மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா + "||" + Tiruvallur districts Jayalalithaa birthday party

திருவள்ளூர் மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

திருவள்ளூர் மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
திருவள்ளூர் மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம், திருப்புலிவனத்தில் அ.தி.மு.க. ஒன்றியச்செயலாளர் பிரகாஷ்பாபு தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடந்தது. நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்துகொண்டு ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


அதேபோன்று உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் நகர இளைஞரணி பொருளாளர் துரைபாபு தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, நுற்றுக்கணக்கானோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் உத்திரமேரூர் முன்னாள் தொகுதி செயலாளர் தர்மன், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எம்.கே.பி. வேலு, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தங்கபஞ்சாசரம், மாவட்ட இளைஞரணி பொருளாளர் ஜெயவிஷ்ணு, திருவந்தவார் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பள்ளிப்பட்டு

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை நகர அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் ஏ.ஜி.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். திருத்தணி எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பிறகு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பால்வள தலைவர் வேலஞ்சேரி சந்திரன், நகர இணை செயலாளர் குமரேசன், துணை செயலாளர் உமாஇளங்கோவன், கிளைசெயலாளர் ஜீவானந்தம், இளைஞர் அணி செயலாளர் வேலு, சக்கரப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பள்ளிப்பட்டு காந்தி சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் பி.ஜெயவேலு தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ. நரசிம்மன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். அதன் பிறகு 4 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் டி.டி.சீனிவாசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி ப்ரியாசுரேஷ், நகரச் செயலாளர் சண்முகம், கடன் சங்க துணைத்தலைவர் சேகர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கருணாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட புதுவாயல், எளாவூர், கும்மிடிப்பூண்டி, பூவலம்பேடு, ஆரம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கோபால்நாயுடு, மு.க.சேகர், ஓடை.ராஜேந்திரன், கண்ணம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ், பூவலம்பேடு கருணாகரன், கோட்டக்கரை ரவி, புதுகும்மிடிப்பூண்டி சுகுமார், இளங்கோ, கோவிந்தன், இமயம் மனோஜ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

கும்மிடிப்பூண்டி பஜாரில் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி 2 ஆயிரம் பேருக்கு எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார் அன்னதானம் வழங்கினார். இது தவிர பல்வேறு இடங்களில் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. கொடி ஏற்றப்பட்டது.